Win 15,000 - Submit Now

‘Wake Up’ Short Film Review!!

  • 10-Aug-2020

கனவுகள் காணும் போது அது உண்மை போல உணர்வது உண்டு. சில கனவுகள் நிஜமாகும், சில கனவுகள் உண்மை போல உணர இயலும். சாதாரணமான கனவுகளில் நமக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது. நமக்கோ அல்லது நம்மை சுற்றி இருபவர்களுக்கோ பாதிப்பு இருப்பது போன்ற கனவுகள் கூட பயத்தை தந்து விடாது. அமானுஷ்ய கனவுகளே பயத்தை கொண்டு வரும். அதுபோன்ற ஒரு குறும்படமே விஜயலஷ்மி நடிப்பில் வெளியான ‘வேக் அப்’.

அன்று இரவு தனது வீட்டில் மர்மமாக உணரும் பெண். இரவு நேரத்தில் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வெளியில் செல்கிறாள். வீட்டில் நடக்கும் மர்மமான சத்தம், திடீரென கதவு மூடுவது என பயந்து மேலே செல்ல முயற்சிக்கும் போது தடுமாறி கீழே விழுகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பயத்தில் அமானுஷ்யங்களிடம் மாட்டி கொள்கிறார். இது ஒரு கனவா? அல்லது அவள் உண்மையில் அதை உணர்கிறாரா?

'Wake Up' Short Film Review!!

கனவில் காணும் அமானுஷ்யங்கள் உண்மையில் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற த்ரில்லிங் அனுபவங்கள் உண்மையில் உணரப்பட்டால் அந்த பயம் என்றும் நீங்காது. பலருக்கு இது போன்ற அமானுஷ்ய கனவுகள் ஏற்படும். அது கனவு என்று காலையில் தான் நிம்மதிக்கிடைக்கும். ஒரு இரவில் பல்வேறு விதமான அனுபவங்களை சந்திப்பது போன்ற பயத்தினை பார்ப்போருக்கும் தருகிறது நடிகை விஜயலக்ஷ்மி அவர்களின் நடிப்பு. இரவில் காட்டப்படும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அனைத்துமே படம் போலவே எடுத்திருக்கின்றனர். மேலும் எதார்த்தமான ஒரு சம்பவத்தை தரமாக எடுத்து காண்பித்துள்ளார் இயக்குனர்.