பெண்களின் வாழ்க்கையில் மிகவும் அவர்கள் முக்கியமென கருதுவது பிரசவ சமயத்தில் தான். பிரசவத்தை விட அவர்கள் மிகவும் பயப்படுவது சுற்றி இருப்போரின் எதிர்பார்ப்பு ஆண் குழந்தை வேண்டுமென்று கேட்கும் பொழுதே. ஆண்கள் ஒரு குடும்பத்தின் வாரிசு என்பதும் அவர்களினால் எந்த ஒரு செலவுகளும் வராது என்பதும் பலரின் தவறான கணக்கு. ஒவ்வொரு தாயின் ஒட்டு மொத்த பாசமும் ஆண் பிள்ளைகளுக்கே சேரும். ஆனால் தந்தையின் அன்பினை முழுதும் பெறுபவன் பெண்ணே. இருப்பினும் ஆன் பிள்ளை வேண்டுமென நினைப்பது ஏன்? பெண் பிள்ளையாய் இருந்தால் என்ன? (Why Not A Girl..?)
அன்பான கணவன் மனைவி இருவர். பிரசவமாக இருக்கும் தனது மனைவியை அன்பாக நடத்தும் கணவர். இருவரிடமும் எந்தவித சுயநல எதிர்பார்ப்பும் இல்லை. இருப்பினும் சுற்றி இருப்பவர்கள் எண்ணுவது ஆண் பிள்ளையையே இதனால் வருத்தம் கொள்ளும் மனைவி. இறுதியில் அவர்களுக்கு பிறந்தது பெண் குழந்தையே. இதை வாலின் கணவர் ஏற்றாரா? என்பதே கதை.
இன்றும் சிலரது விருப்பம் ஆண் குழந்தைகளே, ஆனால் ஒரு போதும் ஒரு தந்தையின் விருப்பம் மாறாது அவரின் தாயை தன் கரத்தில் தாங்க எண்ணுவார்கள். எப்போதும் ஆண்கள் தனது தாயின் இடத்தை அவர்களின் பெண் குழந்தைகளுக்கே தருவார். பிறக்கும் குழந்தை எதுவாயினும் அவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பது மாறாது. பெண்களின் முதல் நிராகரிப்பு இதுவே இதையும் தாண்டி வந்து தான் வர்கள் பூமியில் சாதிக்கிறார்கள். பெண் குழந்தைகளை நிராகரிக்கும் முதன்மை நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த இல்லை மாற வேண்டும் ன்பதை விளக்குவதே இந்த குறும்படம்.