குழந்தைகள் என்றாலே மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் சற்று மாறுபட்டு அமைதியாக இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இது போன்ற குழந்தைகள் யாருடனும் சகஜமாக பேசி பழக மாட்டார்கள் எப்போதும் அமைதியாக தனியாக இருப்பார்கள். இவர்கள் வளரும் போது சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிய கற்பனை கதையே ‘ஐடென்டிட்டி’.
சிறு வயது முதலே அமைதியாக தனிமையில் இருப்பவர் தான் பூஜா, கல்லூரியில் சேர்ந்தும் இதுபோன்றே அவர் தனிமையில் இருக்கிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவன் மீது காதல் கொண்டு இணையத்தில் புதிய பெயரில் போலியாக ஒரு பதிவில் பேசி வருகிறார். பின் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதே கதை.
காதல் அனைத்தையுமே மாற்றும் என்பது உண்மை. அமைதியில் இருப்பவர்கள் சகஜமாக பழக நினைப்பதும் இருப்பினும் சுற்றி இருப்பவர்கள் அவர்களை ஏதேனும் சொல்லிவிட்டால் என்று எண்ணி தன் சுதந்திரத்தை அவர்களே கட்டுப்படுத்தி கொள்ளவார்கள். இது போன்ற ஒருவரே பூஜா இவரின் இயலபான அமைதி முதல் முறை சிரிப்பாக மாறியதே கதையின் சுவாரஸ்யம். இது போன்றவர்களை தனிமையில் இருந்து வெளியில் கொண்டு வர நினைப்பதும் மேலும் அவர்களின் மாற்றத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த்துகிறார் இயக்குனர்.