நம் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு கதை உண்டு.நம் வாழ்வில் இடம் பெரும் பொருள்களுக்கும் ஒரு கதை இருக்கும். இது போன்ற பொருள்களுடன் நாம் இணைக்கப்படுவோம். சிலர் தனது வாழ்வின் ஞாபகங்களாக அது போன்ற பொருள்களை சேமித்து வைத்திருப்பார். சில நேரங்களில் அதை எடுத்து பார்த்து வாழ்விற்கு திரும்பிச் சென்று நினைவுகளை மகிழ்விப்பர், நம்மால் முடிந்தவரை நினைவுகளை உருவாக்குவது மிக முக்கியமானது.
தபஸ்வி என்ற குறும்படமும் அதையே வெளிப்படுத்துகிறது. தள்ளாடும் வயதான ஒருவர் தனது நினைவு பொருள்களை ஒரு பெட்டியில் வைத்து சேமித்து வந்தார். அவர் தனது நினைவுகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவைக் கொண்டிருந்தார். சந்தித்த முதல் பெனின் தலையில் இருந்த ரிப்பன், தந்தை தந்த முதல் பரிசு, எழுதிய பேணா என அனைத்தும். அதனுடன் பேசி தனது நினைவலைகள் பகிர்வது அவரது வழக்கம்.
சிலரின் பழக்கம் இதுவே, அவர்களது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வின் ஞாபகமாக அந்த பொருள் அவர்களிடம் இருக்கும். சிறு வயதில் வாங்கிய பிடித்த பொருள், அப்பா வாங்கித்தந்த பரிசு, முதல் சம்பளத்தில் வாங்கிய பொருள் மற்றும் பல. இது அவர்களுக்கு அவர்களின் வாழ்வாகும். சாமானிய மனிதனுடைய வாழ்வில் நடப்பவையே குறும்படத்தில் படமாக்கப்பட்டது. நடிகர் தணிகெல்லா பரணி அவர்களின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை உணர வைக்கிறது. மேலும் வாழ்வின் இறுதி நாட்களில் பெரியவர்களின் மனநிலையினை அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் சவித் சி சந்த்ரா.