பள்ளி பருவ காதலின் சுகம் தனி தான். இன்றும் பலர், தனது பள்ளி பருவ காதலை மறந்து இல்லை. வகுப்பிற்கு நடுவே இடைவேளையில் காதலி முன் சுற்றி வருவதும், அவளை பற்றி தெரிந்து கொள்வது, வசிக்கும் வீட்டினை கண்டு பிடிப்பது என அனைத்துமே ஒரு வித சந்தோஷம் தான். பள்ளி பருவத்தின் காதலை சொல்லு குறும்படம் ‘மாமுக’
பள்ளியில் கூட படிக்கும் பெண்ணை இசைக்கும் சிறுவன். பள்ளி விழாவின் போது அவளை சுற்றி வருகிறான். நண்பனின் கேமராவை வாங்கி அவளினை படம்பிடிக்கும் இவனின் காதல் அந்த பெண்ணிற்கு தெரிந்ததா என்பதே கதை.
மனம் கவரும் அவளை ஊற்றி யாரும் இளைஞனின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. காதலியாக வரும் பெண்ணின் அழகும் இடையில் இடம்பெறும் பாடலும் அழகானது. ரசிகர்கள் விரும்பும் கதை பள்ளிப்பருவ காதலே, அதனை மிகவும் அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர். இருவரின் இடையில் வரும் அழகிய காட்சிகள் குறும்படத்திற்கு பிளஸ்.