Win 15,000 - Submit Now

Ottamaina Malayalam Short Film Review!!

  • 10-Aug-2020

மூட நம்பிக்கைகள் இன்றும் சிலரால் நம்பப்பட்டு வருகிறது. பலர் அதனை நம்புவதில்லை. சிறு சிறு விஷயங்களுக்கும் பலர் சகுணங்களை பார்பர். வெளியே செல்லும் போது பூனை குறுக்கில் வந்தால் சகுன தடை, கருப்பு காகம் ஒன்று மட்டும் பார்த்தால் துன்பம் இரண்டாக பார்த்தல் இன்பம், நல்ல விஷயங்களை பேசும் போது தும்ம கூடாது, நாய் அழுதால் ஆபத்து இது போன்ற சகுனங்கள் பார்ப்பது வழக்கம். அதை குறிப்பிடும் வண்ணம் எடுக்கப்பட்ட நகைச்சுவை கதையே ‘ஒட்டமைனா’ என்னும் நகைச்சுவை குறும்படம்.

Ottamaina Short Film Review!!

இரு நண்பர்களின் கதை இது. மூடநம்பிக்கைகளை நம்பாத ஒருவனுக்கு நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் குறும்படம். நண்பனின் பேச்சினை தட்டி கழிக்கும் சுரேஷ் இறுதியில் அவனுக்கு நேர்ந்தது என்ன? எதிர்ச்சியாக நடப்பதை நம்பி சுரேஷ் எடுக்கும் முடிவு தான் என்ன?

நண்பன் கீழே விழும்போது தூக்கி விடுபவனை விட சிரிப்பவன் உண்மையான நண்பன் என்பர். நண்பர்களின் சோகமான நேரங்களில் சிரிப்பது என்பதே அனைவரும் செய்வதே. மூடநம்பிக்கைகளை நம்பாத சுரேஷின் நிலையை கண்டு சிரிக்கும் நண்பன் மேலும் அவன் இறுதியில் எடுக்கும் முடிவுகள் என அனைத்துமே நகைச்சுவை கண்ணோட்டத்தில் காண்பிக்கப்படுகின்றன. இயல்பான மனிதனும் உழ்நிலைக்கு தள்ளப்படுவான் ன்பதே இறுதியில் இயக்குனர் கூறும் விளக்கம்.