சிறந்த கதையம்சம் கொண்ட குறும்படங்கள் மக்களின் பாராட்டுகளை பெற்று தரும். சில குறும்படங்கள் குறைவான நேரத்தில் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அதுபோன்ற குறும்படங்கள் அதிக விருதுகளை பெற்று சென்றுள்ளது. லிட்டில் ஷோவ்ஸின் சிறந்த 3 நிமிட குறும்படங்கள் இதோ.
தனது மனைவி மற்றும் மகளின் மரணத்திற்கு காரணமானவரைக் கொல்ல பழிவாங்க முயலும் நபர், பின்னர் அவர் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது ? என்பது கதை.
தற்போதைய தலைமுறையின் காதல் உறவுகளில் உள்ள சிக்கல் இணையமும் கைபேசியும் தான். இதை நன்கு பயன்படுத்தியதந்தை தனது மகளை தனது காதலரிடமிருந்து எவ்வாறு பிரிக்கிறார்.
தனது காதலியின் தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் நீக்க போராடும் காதலனின் கதை. வெளியில் வர தயங்கும் அவள் வானை ஏற்கிறாளா என்பது கதை.
தனது உயிரைக் காப்பாற்றக்கூடிய பெரிய தொகையை கொண்டு வருவதாக உறுதியளித்த தனது நண்பர் குபேரனின் அழைப்பிற்காக துப்பாக்கி முனையில் காத்திருக்கும் பஜன் லால்.
சட்டவிரோதமாக பொருள்களை விற்கும் இரண்டு பேர் இடையில் தெரியாத நபருக்கு எப்படி பணம் கிடைக்கிறதுஎன்பதுதான் கதை.
அன்றாடம் தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் மூதாட்டி. தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிறகு, அவரின் நிலைமையை விவரிக்கும் கதை.
முதியவர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக தனது வங்கி பணத்தை இழக்கிறார். மனைவியின் சிகிச்சைக்கான பணத்தினை அவர் திரும்பவும் பெற்றாரா என்பதே கதை.
திருவிழாவிற்கு பணம் சேர்க்கும் மக்களின் நடுவில் ஊரின் தேவைக்காக பணம் சேர்க்கும் பாலகன்.
சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால் மட்டுமே நோயற்ற வாழ்வினை வாழ முடியும். தங்கையின் உடல் நலனுக்காக போராடும் அண்ணன் கதை.